சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாதர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு மாதர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

Update: 2020-08-25 05:44 GMT
சேரன்மாதேவி, 

சேரன்மாதேவி, அம்பை தாலுகா பகுதியில் நுண்நிதி நிறுவனங்களால் நடத்தப்படும் சுய உதவிக்குழு கடன் நெருக்கடியை வருகிற 31 வரை கொடுக்க வேண்டாம் என்ற உத்தரவை ஊரடங்கு முடியும் வரை என்று கால அவகாசம் கொடுக்க வேண்டும். மார்ச் மாதம் முதல் ஊரடங்கு முடியும் வரை வட்டி முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு மாதர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் கற்பகம் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் வெற்றி செல்வி பேச்சுவார்த்தை நடத்தினார். நுண்நிதி பொறுப்பாளர்களை மீண்டும் வரவழைத்து உங்களது கோரிக்கைகள் சம்பந்தமாக பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதில் ராமர்கனி, ஜாக்குலின், கனகா, மேரி உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்