புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
இளையான்குடி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 3 பேரையும் கைது செய்தனர்.
இளையான்குடி,
இளையான்குடி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக போலீசார் கடைகளில் திடீர் சோதனை செய்தனர். அப்போது காஜா (வயது45), அப்பாஸ் (45), ஜெயசிம்மன் (60) ஆகிய 3 பேரின் கடைகளில் புகையிலை பொருட்கள் இருந்துள்ளது. இதையடுத்து அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.