நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஒரே நாளில் 389 பேருக்கு கொரோனா

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று ஒரே நாளில் 389 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2020-08-24 04:46 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகம் குறையவில்லை. நேற்று ஒரே நாளில் 158 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் நெல்லை மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் 61 பேர் ஆவார்கள். இதுதவிர அம்பை, சேரன்மாதேவி, மானூர், நாங்குநேரி, பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நெல்லை அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதித்தவர்களின் வீடுகளை சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 487 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே கொரோனாவுக்கு மேலும் 2 பேர் நேற்று இறந்தனர். பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்த 60 வயதான முதியவரும், நெல்லை டவுனை சேர்ந்த 75 வயதான முதியவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

தென்காசி-தூத்துக்குடி

தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 140 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டயறிப்பட்டது. அதிகபட்சமாக ஆலங்குளத்தில் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுதவிர கடையம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை, வாசுதேவநல்லூர் ஆகிய ஊர்களை சேர்ந்தவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 751 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 91 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 635 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 9 ஆயிரத்து 949 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 588 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 99 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்