புதிதாக 33 பேர் பாதிப்பு: கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி - உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்வு

கரூர் மாவட்டத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது.

Update: 2020-08-23 22:51 GMT
கரூர்,

கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் டி.என்.பி.எல். காலனியை சேர்ந்த 53 வயது மற்றும் 59 வயதுடைய 2 ஆண்கள், வெண்ணைமலையை சேர்ந்த 5 வயதுடைய சிறுமி, 25 வயது பெண் என 2 பேருக்கும், மண்மங்கலத்தை சேர்ந்த 36 வயது ஆண் மற்றும் 60 வயது முதியவர், சுக்காலியூரை சேர்ந்த 70 வயது முதியவர், 65 வயது மூதாட்டி, செங்குந்தபுரத்தை சேர்ந்த 22 வயது வாலிபர் மற்றும் 56 வயதுடைய ஆண், ஆண்டாங்கோவிலை சேர்ந்த 22 வயது வாலிபர், 58 வயதுடைய ஆண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ராயனூரை சேர்ந்த 68 வயதுடைய முதியவர், வெள்ளாளபட்டியை சேர்ந்த 49 வயதுடைய பெண், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த 24 வயதுடைய வாலிபர், நீலிமேட்டை சேர்ந்த 45 வயதுடைய ஆண், கோயம்பள்ளியை சேர்ந்த 73 வயதுடைய முதியவர், கொசூரை சேர்ந்த 70 வயதுடைய முதியவர், குளித்தலை போலீஸ் குடியிருப்பை சேர்ந்த 56 வயதுடைய ஆண், புகளூரை சேர்ந்த 56 வயதுடைய ஆண், தாந்தோணிமலையை சேர்ந்த 57 வயதுடைய பெண், நச்சலூரை சேர்ந்த 74 வயதுடைய முதியவர், வெள்ளியணையை சேர்ந்த 22 வயதுடைய வாலிபர் உள்பட கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய மூதாட்டி, 70 மற்றும் 75 வயதுடைய முதியவர்கள் என மொத்தம் 3 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்