அம்பத்தூரில் ரூ.2 கோடி செம்மரக்கட்டைகளை மடக்கிப் பிடித்த போலீசார் 2 பேர் கைது
அம்பத்தூரில் நள்ளிரவு வாகன சோதனையின் போது லாரியில் கடத்தி வந்த ரூ.2 கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 500 கிலோ செம்மரக்கட்டைகளை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
திரு.வி.க.நகர்,
சென்னை அம்பத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் கள்ளிக்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்த முயன்ற நிலையில், வாகனம் நிற்காமல் சென்றதால் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.
பின்னர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது அப்பாஸ் (வயது 22) என்பதும், அவர் செம்மரக்கட்டையை கடத்தி வந்த ஒரு லாரிக்கு துணையாக வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து முகமது அப்பாஸ் அளித்த தகவலின் பேரில், சூரப்பட்டு டோல்கேட் அருகே சாலையில் நின்றிருந்த லாரியை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அந்த லாரியில் 5 பெரிய மரப்பெட்டிகள் இருந்தன. அதில் செம்மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபோலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத்தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த டிரைவர் டேவிட் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து லாரியில் இருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள 3½ டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், செம்மர கட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்ற விசாரணையில் மேற்கொண்டனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் அம்பத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், லாரி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். செம்மரக்கட்டைகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நள்ளிரவு நேரத்தில் தீவிர சோதனை செய்து ரூ.2 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகள் கடத்தலை தடுத்த போலீசாருக்கு துணை கமிஷனர் தீபா சத்யன் பாராட்டு தெரிவித்தார்.