கன்னியாகுமரி கடலில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சாமி கும்பிட்டார்

கன்னியாகுமரி கடலில் புனித நீராடிவிட்டு, பகவதி அம்மன் கோவிலில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சாமி கும்பிட்டார்.

Update: 2020-08-23 00:31 GMT
கன்னியாகுமரி, 

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று முன்தினம் கார் மூலம் கன்னியாகுமரிக்கு வந்தார். அவரை அ.தி.மு.க.வினர் வரவேற்றனர்.

அதன்பிறகு அவர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். நேற்று காலை 6 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்துக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சென்று புனித நீராடினார்.

சாமி கும்பிட்டார்

பின்னர் காலை 9 மணி அளவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு அவர் பயபக்தியுடன் அம்மனை கும்பிட்டார்.

மேலும் நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்திரகாந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அந்த பூஜையிலும் அவர் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து கால பைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தர்ம சாஸ்தா சன்னதி, சூரிய பகவான் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழி பட்டார்.

கடந்த மாதம் கன்னியாகுமரிக்கு வந்தவர், 2-வது முறையாக வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்