கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2020-08-22 06:18 GMT
வத்தலக்குண்டு,

தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில செயலாளர் உசிலைசங்கிலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வதிலைசெல்வம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது நடக்கோட்டை ஊராட்சியில் சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். வேலையின்றி தவிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் நடக்கோட்டை பகுதி பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், கட்சி சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில், நடக்கோட்டை ஊராட்சியில் அடிப்படை வசதிகள் விரைவில் செய்து கொடுக்கப்படாவிட்டால் அப்பகுதி பொதுமக்கள் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை திருப்பி ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பெற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்