மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.4½ கோடி கடன் உதவி கலெக்டர் கண்ணன் வழங்கினார்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழு கூட்டமைப்பு ரூ.4 கோடியே 44 லட்சம் வங்கிகடன் உதவியைகலெக்டர் கண்ணன் வழங்கினார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம பஞ்சாயத்துக்களிலும், மகளிர் சுயஉதவிக்குழுக்களை ஒன்றிணைத்து ஊராட்சி அளவிலான சுயஉதவிக்குழு கூட்டமைப்பு அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த கூட்டமைப்பு மகளிர் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. கூட்டமைப்பினை வழிநடத்திட தொடக்க நிதியும், வலுப்படுத்த சமுதாய முதலீட்டு நிதியும் தமிழக அரசு மூலமாக வழங்கப்படுகிறது. கூட்டமைப்பு வலுப்பெற வங்கிகள் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ரூ.4½ கோடி
இந்தவகையில் நடப்பு நிதியாண்டிற்கு 20 மகளிர்சுயஉதவிக்குழு கூட்டமைப்புகளுக்கு ரூ.5 கோடி வங்கிகடன் இணைப்பு வழங்க இம்மாவட்டத்தில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 15 கூட்டமைப்புகள் மற்றும் 2 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.4 கோடி 44 லட்சம் வங்கிகடன் உதவியை கலெக்டர் வழங்கினார்.
நடப்பு நிதி ஆண்டில் 3,477 மகளிர்சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.125½ கோடி வங்கி நேரடி கடன் உதவியும், 900 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கொரோனா சிறப்புகால கடன் உதவியாக ரூ.32 கோடியே 87 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மகளிர் சுயஉதவிக்குழுக்களில் இடம் பெற்றுள்ள மகளிர் கடன் உதவித்தொகை மூலம் முன்னேற்றம் அடைய வேண்டும் என கலெக்டர் கண்ணன் கேட்டுக்கொண்டார்.
இந்தநிகழ்ச்சியில் திட்ட அலுவலர் குருநாதன், மேலாண்மை இயக்குனர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.