சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 269 பேர் பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் நேற்று கொரோனா வைரசால் 269 பேர் பாதிக்கப்பட்டனர்.

Update: 2020-08-22 00:50 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க மாவட்டத்தில் நடமாடும் 62 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகிறது. மேலும் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு கபசுர குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று முன்தினம் கொரோனா வைரசால் 359 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 269 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டும் 161 பேர் பாதிக்கப்பட்டனர். நங்கவள்ளியில் 40 பேர், வீரபாண்டியில் 10 பேர், எடப்பாடியில் 8 பேர், மகுடஞ்சாவடி, ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், தலைவாசலில் 4 பேர், கொளத்தூர், கெங்கவல்லி, வாழப்பாடி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், சேலம் ஒன்றியம், தாரமங்கலம், அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், காடையாம்பட்டி, கொங்கணாபுரம், பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து வந்தவர்கள்

சென்னை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த தலா ஒருவருக்கும் மற்றும் கேரளாவில் இருந்து சேலம் வந்த 2 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 389 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 181 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்