புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 98 பேருக்கு கொரோனா 2 பேர் பலி

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2020-08-21 23:12 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று மட்டும் 98 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,759 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 53 பேர் குணமடைந்ததால் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நேற்று 2 பேர் உயிரிழந்தனர். அந்தவகையில், இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71-ஆக உயர்ந்துள்ளது.

அரிமளம்

அரிமளம் ஒன்றியம் கடியாப்பட்டி அருகே உள்ள சித்தளஞ்சான்பட்டி கிராமத்தை சேர்ந்த 50 வயது ஆண், அரிமளத்தை சேர்ந்த 52 வயது ஆண், வம்பரம்பட்டியை சேர்ந்த 23 வயது பெண் ஆகிய 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பகுதியில் கொரோனாவால் இதுவரை 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 85 பேர் டிஸ்சார்ஜ் ஆகி விட்டனர். 22 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரு மூதாட்டி இறந்துள்ளார். இந்நிலையில் ராயவரம் ஊராட்சியில் 27 பேருக்கும், லெணா விலக்கு பகுதியில் 81 பேருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆவுடையார்கோவில்

ஆவுடையார்கோவில் ஊராட்சிய ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியம் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை பொன்பேத்தி ஆரம்ப சுகாதார மையத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இதில், அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பரிசோதனை செய்துகொண்டனர்.

மேலும் செய்திகள்