தென்காசியில் கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
தென்காசியில் கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி,
தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூர் கன்னார் தெற்கு தெருவை சேர்ந்த கோவிந்தன் மகன் மாரியப்பன் (வயது 38). பன்றி மேய்க்கும் தொழிலாளி. இவர் நேற்று மதியம் தனது உறவினர்கள் மற்றும் சிலருடன் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். கலெக்டர் அலுவலக வாசலில் வந்தவுடன் தனது இடுப்பில் ஒரு கேனில் வைத்திருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை பிடித்து தடுத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது.
நான் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் இனத்தை சார்ந்தவன். நானும், கடையநல்லூர் மேல தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவரும் பன்றி மேய்க்கும் தொழில் செய்து வருகிறோம். பன்றிகளை வளர்ப்பதற்காக ஊர் எல்லைக்கு வெளியே இடம் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது கடையநல்லூர் மலம் பேட்டை தெருவைச் சேர்ந்த செல்லத்துரை மகன் பரமசிவன் மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோர் எங்களிடம் கடையநல்லூர் அருகேயுள்ள கம்பனேரி புதுக்குடி கிராமத்தில் 1 ஏக்கர் 3 சென்ட் நிலம் உள்ளது அதை குறைந்த விலைக்கு தருகிறோம் என்று கூறி ஆசை வார்த்தை காட்டினார்கள். நாங்கள் அதை நம்பி தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் எங்களது மனைவிகளின் நகைகள் மற்றும் எங்களது வீட்டை அடமானம் வைத்து ரூ. 9 லட்சம் தயார் செய்து கடந்த 15-10-2019 அன்று அவர்களிடம் கொடுத்தோம். அவர்களும் எங்களிடம் எழுதிவைத்த பத்திரத்தை கொடுத்தார்கள். பின்னர் நாங்கள் அந்த இடத்திற்கு சென்று பார்த்தோம்.
அப்போது அந்த இடம் கடையநல்லூர் வாணுவர் தெருவைச் சேர்ந்த முகமது யூசுப் என்பவருக்கு சொந்தமானது என்று கூறினார்கள். அவர்களிடம் நாங்கள் எங்களது ஆவணத்தை காட்டினோம். அதற்கு அவர்கள் அது போலியானது என்று கூறி சார்பதிவாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்து அதன் அடிப்படையில் அந்த ஆவணம் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து கேட்பதற்காக கடந்த 19-ந் தேதி நானும், மாரிமுத்து மற்றும் எங்கள் மனைவிகள் ஆகியோருடன் பரமசிவன் வீட்டிற்கு சென்றோம். அப்போது அவர் எங்களை அவதூறாக பேசி என்னை கீழே மிதித்து தள்ளி என் மனைவியை அடித்து தாக்கி கொலை செய்வதாக மிரட்டினார். எங்களுக்கு மிகுந்த பயமும், அவமானமும் ஏற்பட்டுள்ளது. எனவே எங்களை ஏமாற்றி ரூ.9 லட்சம் மோசடி செய்த பரமசிவன் மற்றும் அவர்களது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திருப்பி தருமாறு கேட்டு இங்கு புகார் கொடுக்க வந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
உடனடியாக இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து துணை கலெக்டர் கோகிலா, மாரியப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.