கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி செவிலியர்கள் உள்பட 270 பேருக்கு தொற்று
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியானார்கள். செவிலியர்கள் உள்பட 270 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 7 ஆயிரத்து 571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் 270 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் கடலூர் அரசு மருத்துவமனை செவிலியர்கள் 2 பேர், கீரப்பாளையம் களப்பணியாளர், மங்களூர் செவிலியர், கடலூர், மங்களூரை சேர்ந்த 4 போலீசார், கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த 81 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 174 பேர், விருத்தாசலம், மங்களூரை சேர்ந்த 2 கர்ப்பிணிகளுக்கும் பாதிப்பு உறுதியானது. இது தவிர திருவாரூரில் இருந்து கடலூர், பரங்கிப்பேட்டைக்கு வந்த 2 பேர், ஆந்திராவில் இருந்து கடலூர் வந்த 3 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின்எண்ணிக்கை 7 ஆயிரத்து 841 ஆக உயர்ந்தது. இதற்கிடையில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
2 பேர் பலி
கடலூர் முதுநகரை சேர்ந்த 55 வயது ஆண், 70 வயது மூதாட்டி ஆகிய 2 பேரும் நோய் தொற்று அறிகுறிகளுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும் அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 2 பேரும் உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 230 பேர் குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இது வரை 4 ஆயிரத்து 850 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 635 பேர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், 267 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 1882 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.