கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை

மும்பை கொலாபா பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-08-21 00:13 GMT
மும்பை,

மும்பை கொலாபா நேவிநகர் பகுதியில் கடற்படை முகாம் உள்ளது. இந்த முகாமில் கடற்படை வீரராக இருந்து வந்தவர் லோகலு நாயுடு(வயது23). இவருக்கு அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில் 21 நாள் சிகிச்சைக்கு பின் பூரண குணம் அடைந்த லோகலு நாயுடு கடற்படை முகாமுக்கு திரும்பினார். இதைத்தொடர்ந்து அவரை மீண்டும் பணியில் சேரும்படி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்தநிலையில் முகாமில் தங்கி இருந்த அவர் பணியில் சேராமல் திடீரென மாயமானார். இந்தநிலையில் நேவிநகர் வளாகத்தில் உள்ள மரத்தில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்