திருவெறும்பூர் அருகே ஓட்டல் தொழிலாளி மர்ம சாவு எரித்து கொலையா? போலீசார் விசாரணை
திருவெறும்பூர் அருகே ஓட்டல் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர், எரித்து கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துவாக்குடி,
திருவெறும்பூர் காந்தி நகர் அருகே உள்ள செல்வபுரத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி (வயது 54). இவர், திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து வெளியில் சென்ற இவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் திருவெறும்பூர் பகுதியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் ஒருவர் மர்மமான முறையில் தீயில் கருகி பிணமாக கிடப்பதாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது பிணமாக கிடந்தவர் அருகில் குடிநீர் பாட்டில் ஒன்றில் சிறிதளவு பெட்ரோலும், தீப்பெட்டி ஒன்றும் கிடந்தது. அவர் யார் என்று விசாரணை நடத்தியதில், ரத்தினசாமி என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், சம்பவம் நடைபெற்ற இடம் திருவெறும்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குள் வராது, நவல்பட்டு பகுதிக்குள் வரும் என்று கூறப்பட்டது. அதன்பேரில், நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரத்தினசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எரித்துக் கொலையா?
இதுகுறித்து ரத்தினசாமி குடும்பத்தினர் கொடுத்த புகாரின்பேரில், நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு ரத்தினசாமியை யாராவது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தனரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.