மீன் பிடித்தபோது பரிதாபம்: பூண்டி ஏரியில் மூழ்கி சிறுவன் உள்பட 2 பேர் பலி
பூண்டி ஏரியில் மீன்பிடித்த போது தவறி விழுந்ததில், நீரில் மூழ்கி சிறுவன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பூண்டி இந்தியன் வங்கி தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 42). இவர் திருவள்ளூரில் உள்ள டி.வி., பிரிட்ஜ் விற்பனை செய்யும் வீட்டு உபயோகப்பொருள் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் இமான் (16). பூண்டியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு, தற்போது பிளஸ்-1 வகுப்பு செல்ல இருந்தார்.
நேற்று மாலை இமான், பூண்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்த தனது உறவினர் மகனான சஞ்சய் குமார் (19) என்பவருடன் பூண்டியில் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக சென்றார். அங்கு இருவரும் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென நிலைத்தடுமாறிய இமான் தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கினார்.
அதிர்ச்சியடைந்த சஞ்சய்குமார், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த இமானை காப்பாற்ற நீரில் குதித்தார். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் இருவரின் பெற்றோர்கள், உறவினர்கள் ஆகியோர் விரைந்து வந்து அவர்களது உடலை கண்டு கதறி அழுதது காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கி இறந்த சஞ்சய்குமார், இமான் ஆகியோர் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.