ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் கைது
ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.;
தானே,
நவிமும்பை காமோட்டேவை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஒருவரை காமோட்டே போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் ரோகித்(வயது(30) சந்தித்து பேசினார். அப்போது உங்கள் மீது மோசடி புகார்கள் வருவதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க தனக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் தரும்படியும் கேட்டுள்ளார்.
ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்த அவர், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டார். பின்னர் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத ரியல் எஸ்டேட் உரிமையாளர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் யோசனைப்படி, அவர் போலீஸ் நிலையம் சென்று சப்- இன்ஸ்பெக்டரை சந்தித்து முன்பணமாக ரூ.50 ஆயிரத்தை கொடுத்தார்.
ஆனால் அந்த பணத்தை பெற்றுக்கொள்ள மறுத்த அவர், அலுவலகத்திற்கு வெளியே காரில் இருந்த நித்தின் ஜோஷி (28) என்பவரிடம் பணத்தை கொடுக்கும்படி தெரிவித்தார்.
இதையடுத்து நித்தின் ஜோஷியிடம் லஞ்ச பணத்தை கொடுத்த போது அங்கு மறைந்து இருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து வந்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் தெரிவித்த தகவலின் படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரோகித்தையும் கைது செய்தனர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.