பெங்களூருவில் வீடு புகுந்து பயங்கரம்: அழகு நிலைய பெண் உரிமையாளர் குத்திக்கொலை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பெங்களூருவில் வீடு புகுந்து அழகு நிலைய பெண் உரிமையாளரை குத்திக்கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
பெங்களூரு,
பெங்களூரு பண்டேபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மங்கமனபாளையா பகுதியில் வசித்து வந்தவர் கீதா(வயது 40). இவருக்கு திருமணம் ஆகி கணவரும், மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக கணவர், மகனை பிரிந்து கீதா தனியாக வசித்து வந்தார். மேலும் எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் கீதா சொந்தமாக அழகு நிலையமும் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி இரவு வீட்டில் கீதா தூங்கி கொண்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை கீதாவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதனால் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சங்கரப்பா என்பவர் கீதாவின் வீட்டிற்குள் சென்றார். அப்போது கீதாவின் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதனால் சந்தேகம் அடைந்த சங்கரப்பா, கீதாவின் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டிற்குள் ரத்தவெள்ளத்தில் கீதா பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கரப்பா சம்பவம் குறித்து பண்டேபாளையா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கீதாவின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் வீடுபுகுந்து கீதாவை மர்மநபர்கள் கத்தியால் குத்திக்கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் கீதாவை கொலை செய்த மர்மநபர்கள் யார்? என்ன காரணத்திற்காக கொலை நடந்தது? என்பது தெரியவில்லை. இந்த கொலை சம்பவம் குறித்து பண்டேபாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் மர்மநபர்களையும் வலைவீசி தேடிவருகின்றனர்.