பெங்களூருவில் கொரோனா பீதியால் இந்திய அறிவியல் கழக மாணவர் தற்கொலை - நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு உயிரை மாய்த்தார்
பெங்களூருவில் கொரோனா பீதியால் இந்திய அறிவியல் கழக மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவர் உயிரை மாய்த்து உள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு சி.வி.ராமன் ரோட்டில் இந்திய அறிவியல் கழகம் அமைந்து உள்ளது. இங்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். அதுபோல சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் பகுதியை சேர்ந்த சந்தீப் மார்க்கண்டே(வயது 24) என்பவரும் இந்திய அறிவியல் கழகத்தில் கணக்கீடு மற்றும் தரவு அறிவியல் துறையில் முதுகலை தொழில்நுட்ப படிப்பை படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய அறிவியல் கழகத்தில் வேலை செய்து வரும் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இதனால் சந்தீப் மார்க்கண்டே உள்பட அனைத்து மாணவர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர். இதில் சந்தீப்பின் நண்பர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. ஆனால் சந்தீப்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று அறிக்கை வெளியானது. இருப்பினும் சந்தீப் உள்பட சில மாணவர்கள் தனிமையில் வைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தனக்கு கொரோனா பரவி விடுமோ என்ற பீதியால் சந்தீப் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு சந்தீப் தனது நண்பர்களுக்கு இ-மெயில் மூலம், எனக்கு கொரோனா பரவி விடுமோ என்ற பீதி உள்ளது. இதனால் நான் தற்கொலை செய்ய போகிறேன் என்று தகவல் அனுப்பி உள்ளார். பின்னர் தான் தங்கி இருந்த அறையில் சந்தீப் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சந்தீப்பின் தூக்கில் தொங்குவதை கண்டு சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தீப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கொரோனா பீதியால் சந்தீப் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.