தற்காலிக மார்க்கெட்டில் காய்கறி இறக்க தடைக்கு எதிர்ப்பு: லாரிகளை நடுரோட்டில் நிறுத்தி வியாபாரிகள் போராட்டம் - நெல்லையில் பரபரப்பு
நெல்லை புதிய பஸ்நிலைய தற்காலிக மார்க்கெட்டில் காய்கறிகளை இறக்க தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள், விவசாயிகள் லாரிகளை நடுரோட்டில் நிறுத்தி போராட்டம் நடத்தினர்.
நெல்லை,
நெல்லை டவுன் நயினார்குளக்கரையில் காய்கறி மொத்த மார்க்கெட் செயல்பட்டு வந்தது. சென்னை மாநகரில் கோயம்பேடு மார்க்கெட் மூலம் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. இந்த பாதிப்பு எதிரொலியாக நெல்லை நயினார்குளம் மார்க்கெட் மூடப்பட்டது. அங்கிருந்த சில்லரை காய்கறி விற்பனை கடைகளுக்கு சாப்டர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இடம் ஒதுக்கப்பட்டது. மொத்த காய்கறி கடைகள் புதிய பஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக மார்க்கெட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
அங்கு 2 மாதங்களுக்கு மேல் செயல்பட்டு வரும் இந்த மார்க்கெட்டை காலி செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் நிலையத்தை மொத்தமாக 10 நாட்கள் மூடி கிருமி நாசினி தெளித்து கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி தற்காலிக மார்க்கெட் கடைகள், அருகில் உள்ள தனியார் ஆம்னி பஸ் நிறுத்த வளாகத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர் மீண்டும் புதிய பஸ் நிலையத்துக்கு தற்காலிக மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலையில் தற்காலிக மார்க்கெட் வழக்கம் போல் கூடியது. அங்கு ஏலத்தில் காய்கறிகளை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறி மூட்டைகளை லாரி, மினி லாரிகள், லோடு ஆட்டோக்களில் ஏற்றிக்கொண்டு வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மாநகராட்சி பஸ் நிலைய காவலாளிகள், மூட்டையை இறக்க விடாமல் தடை விதித்தனர். லாரிகள் செல்லும் பாதையும் அடைக்கப்பட்டது.
பஸ் நிலைய பிளாட்பாரத்தை மேம்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. மேலும் பஸ் நிலைய கட்டிடங்களின் மேல் பகுதியில் கூடுதல் வணிக வளாகம் கட்டும் பணியும் தொடங்கப்பட உள்ளது. எனவே காய்கறி லோடுகளை இறக்க அனுமதி கிடையாது என்று கூறினர். இதை அறிந்த வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோதும் உரிய பதில் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள், விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த காய்கறி மூட்டைகளை லாரிகளுடன் பஸ் நிலைய நுழைவு வாசல் அருகே நடுரோட்டில் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தினார்கள். அங்கு தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது 2 நாட்கள் தொடர்ந்து மார்க்கெட் நடத்துமாறும், புதிய இடம் தொடர்பாக அதற்குள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து மறியலை கைவிட்டு, அவர்கள் தற்காலிக மார்க்கெட்டுக்கு சென்றனர். இந்த சம்பவம் நெல்லை புதிய பஸ் நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.