நைஜீரியா நாட்டில் கடலில் தவறி விழுந்து இறந்த கப்பல் மாலுமி உடல் சொந்த ஊரில் அடக்கம்
நைஜீரியா நாட்டில் கடலில் தவறி விழுந்து இறந்த கப்பல் மாலுமி உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
ஆறுமுகநேரி,
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வில்கியூஸ் லோபோ. இவரது 2-வது மகன் வில்பன் லோபோ (வயது 21). இவர் கடந்த நவம்பர் மாதம் மும்பையைச் சேர்ந்த நிறுவனம் மூலம் ஒரு கப்பலில் எந்திர பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு சேர்ந்தார்.
கடந்த மாதம் 26-ந் தேதி இரவில் நைஜீரியா நாட்டு கப்பலில் இருந்து தவறி கடலில் விழுந்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மும்பையில் உள்ள அலுவலகம் மூலம் அவரது வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
இதுதொடர்பாக புன்னக்காயலில் உள்ள கப்பல் மாலுமிகள் சங்கம், மும்பையில் உள்ள அகில இந்திய கப்பல் மாலுமிகள் சங்கத்தை தொடர்பு கொண்டு வில்பன் லோபோவை தேடும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில் வில்பன் லோபோ உடல் கடந்த மாதம் 28-ந் தேதி அதே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கொரோனா தொற்று காரணமாக அங்கு இருந்து உடல் கொண்டு வர தாமதம் ஆனது. இதனால் வில்பன் லோபோ குடும்பத்தினர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்த நிலையில் வில்பன் லோபோ உடல் நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. அங்கு இருந்து ஆம்புலன்ஸ் மூலம் புன்னக்காயல் வந்தது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் சிறிது நேரத்தில் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
வில்பன் லோபோ குடும்பத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆறுதல் கூறினார். அவருடன் அகில இந்திய கப்பல் மாலுமிகள் சங்க துணை தலைவர் விமல்சன், புன்னக்காயல் கிராம பஞ்சாயத்து தலைவி சோபியா, புன்னக்காயல் ஊர்கமிட்டி தலைவர் சந்திரபோஸ் உள்பட பலர் உடன் சென்றனர்.