திருப்பூர் மாவட்டத்தில், டாக்டர் உள்பட 45 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,647 ஆக உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் டாக்டர் உள்பட 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,647 ஆக உயர்ந்துள்ளது.;

Update: 2020-08-19 06:01 GMT
திருப்பூர்,

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. 7-வது கட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, திருப்பூர் பாவேந்தர் நகரை சேர்ந்த 55 வயது ஆண், தெற்குபாளையம் விநாயகர் நகரை சேர்ந்த 22 வயது ஆண், பல்லடம் அருள்புரத்தை சேர்ந்த 45 வயது ஆண், குடிமங்கலம் கொங்கல்நகரம்புதூரை சேர்ந்த 35 வயது ஆண், திருப்பூர் செந்தில்நகரை சேர்ந்த 70 வயது ஆண், 60 வயது ஆண், திருப்பூர் கணேசபுரத்தை சேர்ந்த 39 வயது ஆண்.

ஊத்துக்குளி பல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்த 30 வயது ஆண், திருப்பூர் வீரப்பகவுண்டர் வீதியை சேர்ந்த 52 வயது ஆண், கெங்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 48 வயது ஆண், திருமலைநகரை சேர்ந்த 58 வயது ஆண், புதுத்தோட்டத்தை சேர்ந்த 83 வயது முதியவர், கோபால்நகரை சேர்ந்த 24 வயது பெண், நெசவாளர் காலனியை சேர்ந்த 50 வயது பெண், ஜே.ஜே.நகரை சேர்ந்த 28 வயது ஆண், திருப்பூரை சேர்ந்த 18 வயது பெண், உடுமலை குரல்குட்டை சாஸ்தா நகரை சேர்ந்த 40 வயது ஆண், தாராபுரம் ஜீவாகாலனியை சேர்ந்த 35 வயது ஆண், ஈட்டிவீரம்பாளையத்தை சேர்ந்த 34 வயது ஆண், மூலனூர் காமராஜர் நகரைசேர்ந்த 33 வயது ஆண், அவினாசி பெரியபாளையத்தை சேர்ந்த 57 வயது பெண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் காளிபாளையம் சடையப்பன் கோவில் வீதியை சேர்ந்த 33 வயது ஆண், திருப்பூர் தெற்கு போலீஸ் நிலைய போலீஸ்காரரான 33 வயது ஆண், குமரானந்தபுரம் பாபுஜி நகரை சேர்ந்த 47 வயது ஆண், குமார் நகர் ஆண்டிக்காட்டை சேர்ந்த 50 வயது ஆண், திருப்பூர் அய்யம்பாளையத்தை சேர்ந்த 27 வயது ஆண், செல்லம் நகர் கே.டி.சி. பள்ளி வீதியை சேர்ந்த டாக்டரான 46 வயது ஆண், அவினாசி வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த 1 வயது பெண் குழந்தை, திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி ஊழியரான 28 வயது ஆண், திருப்பூரை சேர்ந்த 20 வயது பெண், அங்கேரிப்பாளையம் வெங்கமேட்டை சேர்ந்த 1 வயது பெண் குழந்தை, மலையாண்டிக்கவுண்டனுரை சேர்ந்த 58 வயது ஆண், நரசநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 48 வயது ஆண், பல்லடம் டி.எம்.டி. நகரை சேர்ந்த 60 வயது ஆண், மடத்துக்குளம் இ.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 39 வயது ஆண், திருப்பூரை சேர்ந்த 20 வயது ஆண், மங்கலம் ரோஸ் கார்டனை சேர்ந்த 57 வயது பெண், 69 வயது ஆண், கிட்டாங்கு தோட்டத்தை சேர்ந்த 24 வயது பெண், தாராபுரம் ஜீவாகாலனியை சேர்ந்த 35 வயது ஆண், கணபதிபாளையத்தை சேர்ந்த 60 வயது ஆண், ராமுகாலனியை சேர்ந்த 75 வயது முதியவர், குமரானந்தபுரத்தை சேர்ந்த 50 வயது ஆண், செவந்தாம்பாளையத்தை சேர்ந்த 24 வயது பெண், வீரபாண்டி பிரிவை சேர்ந்த 55 வயது ஆண் ஆகியோர் என மொத்தம் 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,647ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்