மாவட்டத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தையும், கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் நல்லக்கண்ணுவையும் சமூக ஊடகங்களில் ஆபாசமாக பதிவிட்டு, அவதூறு பரப்பிய சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு நிர்வாகி பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட குழு நிர்வாகி சங்கரன், மாதர் சங்க நிர்வாகி சுபத்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாபு, முனியன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மாநில குழு சிவராஜ், நிர்வாகிகள் மங்கம்மாள், அழகேசன், ராமச்சந்திரன், அங்கம்மாள், ரஜினி, கண்ணன், பெருமாள், முத்தையன், ஜெகநாதன், முருகேசன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
பர்கூர் பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் கண்ணு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முனிசாமி, திருப்பதி, பரிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்டக்குழு உறுப்பினர்கள் ராஜாமணி, ராஜேந்திரன், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கருப்பு கொடி ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில், சென்னையன் நன்றி கூறினார்.
கெலமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். இதில் நகர செயலாளர் நாகராஜ், குர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கெலமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
ராயக்கோட்டை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு வட்டார தலைவர் தொட்டன் தலைமையிலும் ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சேகர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்