கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: கவர்னர் மாளிகை, சட்டசபை வளாகத்தில் கிருமி நாசினி தெளிப்பு

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கவர்னர் மாளிகை, சட்டசபை வளாகத்திலும், முக்கியமான இடங்களிலும் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Update: 2020-08-19 01:03 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று முழு ஊரங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையொட்டி நகர பகுதியில் உள்ள முக்கியமான இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கவர்னர் மாளிகை, சட்டசபை வளாகம், பாரதி பூங்கா, மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பெரிய மார்க்கெட், முத்தியால்பேட்டை மார்க்கெட், பஸ்நிலையத்தில் இயங்கி வரும் தற்காலிக காய்கறி மார்க்கெட், உழவர்சந்தை உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் வீடுகளிலும் சுமார் 8500 லிட்டர் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதற்காக 4 வாகனங்கள் மற்றும் 20 கைப்பம்புகள் பயன்படுத்தப்பட்டன. நகராட்சி ஆணையர் சிவக் குமார் மேற்பார்வையில் ஊழியர்கள் 60 பேர் நகரின் அனைத்து பகுதிகளிலும் மருந்து தெளித்தனர்.

உழவர்கரை நகராட்சி சார்பில் 50 பேர் கொண்ட குழுவினர் ஒவ்வொரு பகுதியாக சென்று கிருமி நாசினி தெளித்தனர். இதில் நெல்லித்தோப்பு மார்க்கெட், மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கொரோனால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுமார் 7 ஆயிரம் லிட்டர் கிருமி நாசினி தெளித்தனர்.

இந்த பணிகளில் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்