நெல்லையில் பரபரப்பு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அதிகாரி கைது
நெல்லையில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
நெல்லை,
நெல்லை பாளையங்கோட்டை திம்மராஜபுரம் ஆண்டாள் தெருவை சேர்ந்தவர் கந்தன் (வயது 71), ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவருடைய மனைவி பார்வதி. இவருக்கு பூர்வீக சொத்து உள்ளது. தனது மாமனார் சொத்தை தனது மனைவி பார்வதி பெயருக்கு மாற்றம் செய்ய கந்தன் முடிவு செய்தார். இதுதொடர்பாக விண்ணப்பத்தை பாளையங்கோட்டையில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் சமர்ப்பித்தார். கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பம் செய்தார். அந்த விண்ணப்பம் சூப்பிரண்டு சண்முகம் (57) பார்வைக்கு வந்தது. அங்கு கந்தன் சென்று பெயர் மாற்றத்துக்கான ஆணை தயாராகி விட்டதா? என்று கேட்டுள்ளார்.
அதற்கு சண்முகம், ரூ.5 ஆயிரம் தந்தால் பெயர் மாற்றத்துக்கான ஆணை தயாராகி விடும் என்றார். ஆனால் கந்தன் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. இதுகுறித்து அவர் நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு எஸ்காலிடம் புகார் செய்தார்.
போலீசார் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை கொடுத்து அனுப்பினர். நேற்று காலை 11.15 மணி அளவில் பாளையங்கோட்டை வார்டு அலுவலகத்துக்கு கந்தன் வந்தார். அங்கு லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு எஸ்கால் தலைமையில் இன்ஸ்பெக்டர் அனிதா மற்றும் போலீசார் மாறுவேடத்தில் பதுங்கி இருந்தனர்.
கந்தன் லஞ்ச பணத்தை சண்முகத்திடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த போலீசார் சண்முகத்தை கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பாளையங்கோட்டையில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு சண்முகத்தை போலீசார் அழைத்து சென்றனர்.
ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.