பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் கல்வி தொடரும் மந்திரி வர்ஷா கெய்க்வாட் தகவல்
பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் ஆன்லைன் கல்வி தொடரும் என மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறினார்.
மும்பை,
கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பாடம் கற்று கொடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மராட்டியத்தில் ஆன்லைன் கல்வி தொடரும் என பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார்.
தனியார் பள்ளி கட்டணம்
இது குறித்து அவர் கூறுகையில், ‘‘பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாத வகையில் ஆன் லைன் கல்வி தொடரும்’’ என்றார்.
மேலும் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது குறித்து கேட்டபோது, அந்த விவகாரம் கோர்ட்டில் இருப்பதாகவும், தீர்ப்பு வந்தவுடன் அந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும், என்றார்.