செங்குன்றம் அருகே வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை 4 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு

செங்குன்றம் அருகே நடந்து சென்ற வாலிபர் ஓட, ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2020-08-16 00:04 GMT
செங்குன்றம், 

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோலையம்மன் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சோமு (வயது 20). இவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலையில்லாமல் இருந்து வந்தார். இவர் மீது செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் 2 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் சோமு நேற்று மாலை சோலையம்மன் நகரில் ஒரு துக்க நிகழ்வுக்கு சென்றுவிட்டு நாகத்தம்மன் நகர் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து, ஓட, ஓட விரட்டி பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.

போலீஸ் வலைவீச்சு

இதில் படுகாயமடைந்த சோமு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்து இறந்தார். இது குறித்து தகவலறிந்து சோழவரம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து கொலைக்கு காரணமான காரணமான 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்