மராட்டியத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 413 பேர் பலி

மராட்டியத்தில் புதிய உச்சமாக கொரோனாவுக்கு ஒரே நாளில் 413 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2020-08-13 20:54 GMT
மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இங்கு நோய் பாதித்தவர்கள், பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் மேலும் 11 ஆயிரத்து 813 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 60 ஆயிரத்து 126 ஆகி உள்ளது.

இதில் 3 லட்சத்து 90 ஆயிரத்து 958 பேர் குணமடைந்து விட்டனா். தற்போது 1 லட்சத்து 49 ஆயிரத்து 798 போ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

413 பேர் பலி

இதேபோல மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 413 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் மராட்டியத்தில் வைரஸ் நோய்க்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுவரை 19 ஆயிரத்து 63 பேர் பலியாகி உள்ளனர்.

தானேயில் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நவிமும்பை, கல்யாண் டோம்பிவிலியில் பாதித்தவா்கள் எண்ணிக்கை பெரியளவில் அதிகரித்து உள்ளது.

இதில் நேற்று தானே மாநகராட்சியில் புதிதாக 227 பேருக்கும், தானே புறநகரில் 196 பேருக்கும், நவிமும்பையில் 333 பேருக்கும், கல்யாண் டோம்பிவிலியில் 345 பேருக்கும், மிராபயந்தரில் 146 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பன்வெல்

இதுதவிர பால்கரில் 172 பேருக்கும், வசாய் விராரில் 213 பேருக்கும், ராய்காட்டில் 317 பேருக்கும், பன்வெலில் 189 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல புனே மாநகராட்சியில் 1,148 பேருக்கும், பிம்பிரி சிஞ்வட்டில் 848 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்