பெரம்பலூர்-அரியலூரில் மேலும் 89 பேருக்கு கொரோனா
பெரம்பலூர்- அரியலூரில் மேலும் 89 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்,
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரியலூர் நகராட்சி, அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 5 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 16 பேருக்கும், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 9 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒருவருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கும் என மொத்தம் 54 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,345 ஆக உயர்ந்துள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 1,020 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 312 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 386 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
இதேபோல் பெரம்பலூர் தாலுகாவில் பெரம்பலூர், துறைமங்கலம், வடக்கு மாதவி ரோடு அம்மன் நகர், விவேகானந்தர் தெரு, வெங்கடேசபுரம், கல்பாடி, எசனை, வேலூர், சத்திரமனை, எளம்பலூர் ஆகிய பகுதிகளில் 18 பேருக்கும், ஆலத்தூர் தாலுகாவில் குரும்பாபாளையம், வரகுபாடி, திம்மூர், கூத்தூர், தொண்டபாடி, கண்ணபாடி, செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் 8 பேருக்கும், வேப்பந்தட்டை தாலுகாவில் அரும்பாவூர், தலைநகர், அ.மேட்டூர், பிரம்மதேசம் ஆகிய பகுதிகளில் 4 பேருக்கும், வேப்பூர் வட்டாரத்தில் பெண்ணக்கோணம், புதுவேட்டக்குடி, வேப்பூர், பொன்னகரம் ஆகிய பகுதிகளில் 4 பேருக்கும், லால்குடியில் பெரம்பலூரில் வசித்த ஒருவர் என 13 பெண்கள், 6 மாத ஆண் குழந்தை உள்பட மொத்தம் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 753 ஆக உயர்ந்துள்ளது.