30 வினாடிகளில் கொரோனா பரிசோதனை முடிவு: மாநகராட்சி ஆய்வு

30 வினாடிகளில் கொரோனா பரிசோதனை முடிவு தெரியும் தொழில்நுட்பம் குறித்து மாநகராட்சி ஆய்வு நடத்த உள்ளது.

Update: 2020-08-10 22:30 GMT
மும்பை, 

கொரோனா வைரசை கண்டறிய வெவ்வேறு வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் ஆர்.டி.- பி.சி.ஆர். சோதனை முறைதான் துல்லியமான முடிவுகளை தரும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த முறையில் பரிசோதனை முடிவு வர குறைந்தது ஒரு நாளாவது ஆகி விடுகிறது. மராட்டியத்தில் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையும், 30 நிமிடத்தில் முடிவு தெரியவரும் ஆன்டிஜென் பரிசோதனையும் செய்யப்படுகிறது.

இந்தநிலையில் 30 வினாடிகளில் கொரோனா முடிவு தெரியும் ஏ.ஐ. (ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ்) சோதனை முறை குறித்து மும்பை மாநகராட்சி ஆய்வு செய்ய உள்ளது.

குரல் மாதிரி மூலம் மேற்கொள்ளப்படுகிற இந்த சோதனை குறித்து மும்பை மாநகராட்சி கூடுதல் கமிஷனர் சுரேஷ் ககனானி கூறுகையில், “இந்த தொழில்நுட்பம் ஆரம்ப நிலையில் உள்ளது. எனவே அதன் முடிவுகளை மறுசோதனை செய்ய வேண்டி உள்ளது. இந்த தொழில்நுட்பம் குறித்து ஆய்வு நடத்த உள்ளோம். இந்த ஆய்வு கோரேகாவ் கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள 2 ஆயிரம் நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட உள்ளது” என்றார்.

மேலும் அவர், இந்த தொழில்நுட்பம் வெற்றி பெற்றால் இதை பொது மக்கள் அதிகம் கூடும் விமான நிலையம், வணிக வளாகங்கள், ரெயில் நிலையங்கள், தியேட்டர், பஸ் நிலையம் போன்ற இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய உதவும் எனவும் கூறினார்.

மேலும் செய்திகள்