மோட்டார் சைக்கிள் மோதி பெண் சாவு

மோட்டார் சைக்கிள் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2020-08-10 19:42 GMT
கல்பாக்கம், 

கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் மெய்யூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி ராணி (வயது 50). இவர், மீன் விற்பனை செய்வதற்காக திருக்கழுக்குன்றம் சென்றுவிட்டு, பின்னர் தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி வந்தார்.

கல்பாக்கம் அருகே உள்ள அணுபுரம் பகுதியை கடக்க முயன்றபோது, பக்கவாட்டு சாலையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த ராணி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்