நெமிலி, பனப்பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பனப்பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
நெமிலி,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நெமிலி, பனப்பாக்கம் பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆர்.வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசு ரெயில்வே, விமானத்துறை, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது.
கொரோனா ஊரடங்கு நேரத்தில் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்தவர்கள், பதிவை புதுப்பிக்க தவறியவர்கள், ஆட்டோ ஓட்டுனர், விசைத்தறி தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும், 60 வயது முடிந்த தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் சம்பத், செல்வராஜ், ராஜா,தேவநாதன், வரதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.