அரியலூரில், கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி - பெரம்பலூரில் 45 பேர் பாதிப்பு

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-08-08 22:00 GMT
அரியலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பெரம்பலூர், ராஜாஜி நகர், ஸ்ரீ ரெங்கா நகர், தெற்கு மாதவி, எசனை, கல்பாடி, அ.மேட்டூர், அரணாரை, கூத்தூர், வாலிகண்டபுரம், கிருஷ்ணாபுரம், பிம்பலூர், பூலாம்பாடி, பாளையூர், தேவையூர், வேப்பந்தட்டை, அல்லிநகரம், மேலமாத்தூர், கொத்தவாசல், திம்மூர், வரகுபாடி, வெங்கனூர், கூடலூர், செட்டிகுளம், சிறுவாச்சூர், கோனேரிப்பாளையம், வேலூர், பெண்ணக்கோணம், புதுவேட்டக்குடி, ராமலிங்கபுரம், கொளப்பாடி, பாடாலூர் ஆகிய பகுதிகளில் 11 பெண்கள் உள்பட 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 672 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது 202 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 319 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 9 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 11 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 5 பேருக்கும், செந்துறை, தா.பழூர் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 6 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதியில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,247 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 951 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 284 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 277 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்