காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு, வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் நேரில் ஆய்வு

காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2020-08-07 02:53 GMT
காவேரிப்பட்டணம், 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பேரூராட்சி தேர்பேட்டையில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் நடைபெறும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், தட்ரஹள்ளி ஏரியில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ. 12.25 லட்சம் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் திறந்தவெளி கிணறு அமைக்கும் பணி, அரசம்பட்டி ஊராட்சி காந்திபுரம் தெருவில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்ட சிமெண்டு சாலை, ரூ. 9 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமான பணி, குடிமராமத்து திட்டத்தின்கீழ் பாசன கால்வாய் சங்கம் பங்களிப்புடன் ரூ. 84.75 லட்சம் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்ட வாய்கால் புனரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரம்பட்டி ஊராட்சியில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் பாரூர் பாசன கால்வாய் சங்கம் பங்களிப்புடன் புதியதாக அமைக்கப்பட்ட வாய்கால் புனரமைப்பு பணிகள் மற்றும் தடுப்பணை கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இக்கால்வாய் மூலம் பாரூர் சின்ன ஏரியில் இருந்து அரசம்பட்டி, பென்டரஅள்ளி, திப்பனகுட்டை ஆகிய பகுதிகள் பாசன வசதி பெறும் வகையில் இக்கால்வாய்கள் மற்றும் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் தடையின்றி பாசன வசதி பெறுவார்கள். தற்போது நடைபெற்று வரும் பணிகளை விரைவாக முடிக்கப்பெற்று, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேடியப்பன், சிவபிரகாசம், உதவி செயற்பொறியாளர் அருள்ராஜ், உதவி பொறியாளர்கள் சத்தியநாராயணராவ், சவுந்திரராஜன், பணி மேற்பார்வையாளர் மகாராஜன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் முருகேசன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்