நெல்லை டவுனில் தற்காலிக காய்கறி மார்க்கெட் மாநகராட்சி ஆணையாளர் திறந்து வைத்தார்
நெல்லை டவுனில் தற்காலிக காய்கறி மார்க்கெட் மாநகராட்சி ஆணையாளர் திறந்து வைத்தார்.
நெல்லை,
நெல்லை டவுனில் நேதாஜி போஸ் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. அந்த மார்க்கெட் நெல்லை மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் நவீன மயமாக்கப்படுகிறது. அங்குள்ள கடைகள் நெல்லை டவுன் பொருட்காட்சி திடலுக்கு மாற்றப்பட்டு உள்ளது. தற்போது நெல்லை டவுன் ஆர்ச் அருகே நேதாஜி போஸ் மார்க்கெட் திறந்தவெளி கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 252 கடைகள் இருக்கின்றன. இந்த தற்காலிக மார்க்கெட் திறப்பு விழா நேற்று நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், ‘ரிப்பன்’ வெட்டி மார்க்கெட்டை திறந்து வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, நெல்லை மாநகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் குணசேகர், நெல்லை மாநகர அனைத்து உள்ளாட்சி கடை வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சாலமோன், மாநில இணை செயலாளர் நயன்சிங், நுகர்பொருள் வினியோகஸ்தர் சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் பால்ராஜ், மாநில துணை செயலாளர் அருள் இளங்கோ, வர்த்தக சங்க செயலாளர் விநாயகம், செயலாளர் பால்ராஜ், மார்க்கெட் செயலாளர் மனோகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.