மாவட்டத்தில், தாய்-பிறந்த குழந்தை உள்பட 15 பேருக்கு கொரோனா
மாவட்டத்தில் தாய்- பிறந்த குழந்தை உள்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாவட்டத்திற்கு உட்பட்ட கடவூரை சேர்ந்த 20 வயதுடைய தாய்க்கும், அவருக்கு பிறந்த குழந்தைக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், பசுபதிபாளையத்தை சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவருக்கும், 75 வயதுடைய மூதாட்டிக்கும், சின்னையம்பாளையத்தை சேர்ந்த 21 வயதுடைய வாலிபர் மற்றும் 45 வயதுடைய ஒருவருக்கும், பள்ளபட்டியை சேர்ந்த 38 வயதுடைய ஆண், ராயனூரை சேர்ந்த 39 வயதுடைய ஆண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் வையாபுரிநகரை சேர்ந்த 52 வயதுடைய பெண், தாந்தோணிமலையை சேர்ந்த 49 வயதுடைய பெண், என்.புதூரை சேர்ந்த 47 வயதுடைய ஆண், அய்யம்பாளைத்தை சேர்ந்த 48 வயதுடைய ஆண், லாலாப்பேட்டையை சேர்ந்த 36 வயதுடைய ஆண், பழையசுக்காலியூரை சேர்ந்த 44 வயதுடைய பெண், அண்ணாநகரை சேர்ந்த 39 வயதுடைய பெண் என மொத்தம் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாபேட்டையை அடுத்த கொம்பாடிபட்டியில் 36 வயதுடைய ஆணுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்ததால், கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவரை கரூர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்தபோது, அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கொம்பாடிபட்டியில் அவரது வீட்டில் உள்ள 10 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, அந்த பகுதியில் தடுப்புகள் அமைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.