அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி; காஞ்சீபுரத்தில் இருந்து புனித மண் - சங்கராச்சாரியார் அனுப்பி வைத்தார்
அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்காக புனித மண், தங்க காசு, வெள்ளி காசு, பூஜை பொருட்கள் போன்றவற்றை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அயோத்திக்கு அனுப்பி வைத்தார்.
காஞ்சீபுரம்,
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடைபெற உள்ளது. இதுகுறித்து காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியதாவது:-
அயோத்தியில் ராமபிரான் அவதரித்த இடத்தில் கோவில் கட்டும் முயற்சி 1958-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1986-ம் ஆண்டு அயோத்தியில் தரிசனம் செய்தார்.
அப்போது இரு சாமரங்கள், ஒரு அலங்கார குடை அனுப்பி வைக்கப்பட்டது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக 29-7-1989-ல் காஞ்சி சங்கர மடத்தில் இருந்து செங்கற்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அயோத்திக்கும், தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்புகள் பல உள்ளன. நாட்டின் கவுரவம், ஒற்றுமை, புனிதத்தன்மை வளர்ந்திடவேண்டும். தேசபக்தியும், தெய்வ பக்தியும் வளரவேண்டும். ராமருக்கு ஆஞ்சநேயர் உதவியதுபோல ராமர் கோவில் கட்டும் புனித பணியில் பக்தர்களும் பங்கெடுத்து கொள்ள வேண்டும். பக்தர்கள் அவரவர்களது இருப்பிடங்களில் இருந்து கொண்டே பூமி பூஜை நடக்கும் அதே நேரத்தில் 108 முறை ராம மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.
மறைந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அவதார திருநாளான ஆகஸ்டு 5-ந்தேதி அயோத்தியில் ராமபிரானுக்கு கோவில் கட்ட பூமி பூஜை நடைபெறுவது அதிர்ஷ்டமாகும். ராமர் கோவில் கட்டுவதற்காக காஞ்சி சங்கர மடத்தில் இருந்து புனித மண், பூஜைபொருள்கள், தங்க காசுகள், வெள்ளிக்காசுகள், பட்டுத்துணிகள், ராமமந்திரம் எழுதப்பட்ட வெள்ளித்தட்டு போன்றவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.