வேலை செய்து வந்த நகை பட்டறையில் 118 பவுன் நகை திருடிய வாலிபர்; பெங்களூரு விமான நிலையத்தில் சிக்கினார்
வடபழனியில் தான் வேலை செய்து வந்த நகை பட்டறையில் 118 பவுன் நகையை திருடி விமானத்தில் தப்பிச்செல்ல முயன்ற வடமாநில வாலிபர், பெங்களூரு விமான நிலையத்தில் கைதானார்.
பூந்தமல்லி,
சென்னை வடபழனி, கங்கையம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சுலாதேஷ் குமார்மாஜி(வயது 49). இவர், வீட்டிலேயே சொந்தமாக நகை பட்டறை வைத்து தங்க நகைகள் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது நகை பட்டறையில் கடந்த 6 மாதமாக மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அசிஸ் ரகுமான்(30) என்பவர் வீட்டின் மேலே தங்கி வேலை செய்து வந்தார்.
கடந்த வாரம் அசிஸ் ரகுமான் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் சந்தேகமடைந்த சுலாதேஷ், நகைபட்டறைக்கு சென்று சோதனை செய்தபோது சுமார் 118 பவுன் எடைகொண்ட 39 தங்க சங்கிலிகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த நகைகளை அசிஸ் ரகுமான் திருடிச்சென்றது தெரிந்தது.
இதனால் சுலாதேஷ், அசிஸ் ரகுமானின் உறவினர்களிடம் விசாரித்தார். ஆனால் அவர் கள், அசிஸ் ரகுமான் இதுவரை மேற்கு வங்க மாநிலத்துக்கு வரவில்லை எனவும், வந்தவுடன் நகைகளை பெற்று தருவதாகவும் கூறினர். இதனால் அவர் போலீசில் புகார் எதுவும் கூறவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் அசிஸ் ரகுமான், சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு சென்று அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் மேற்கு வங்க மாநிலத்துக்கு தப்பிச்செல்ல முயன்றார். பெங்களூரு விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையில் அவர் திருட்டு நகைகளுடன் தப்பிச்செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அசிஸ் ரகுமானை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதையறிந்த சுலாதேஷ், வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.