திருப்பூர் மாவட்டத்தில் நர்சு உள்பட 40 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 949 ஆக உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நர்சு உள்பட மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 949 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-08-03 04:45 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதமாகவே பாதிப்பு இல்லாத நாள் இல்லை என்ற அளவிற்கு இருக்கிறது. தினமும் பாதிப்பு கணிசமான எண்ணிக்கையில் இருந்து வருகிறது. தற்போது ஒரு வாரமாக இந்த பாதிப்பின் வேகமும் சற்று அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 5 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு இருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி திருப்பூர் பொங்கலூரை சேர்ந்த 23 வயது பெண், 70 வயது பெண், ஆண்டிபாளையத்தை சேர்ந்த 23 வயது பெண், தாராபுரம் ரோட்டை சேர்ந்த 42 வயது ஆண், அவினாசியை சேர்ந்த 33 வயது பெண், திருப்பூர் 60 அடி ரோட்டை சேர்ந்த 25 வயது பெண், தாராபுரத்தை சேர்ந்த 63 வயது ஆண், சிவசக்தி நகரை சேர்ந்த 59 வயது ஆண், பல்லடத்தை சேர்ந்த 72 வயது பெண், நொச்சிபாளையத்தை சேர்ந்த 57 வயது ஆண், உடுமலையை சேர்ந்த 73 வயது பெண், குமரலிங்கத்தை சேர்ந்த 48 வயது ஆண், காரணம்பேட்டையை சேர்ந்த 38 வயது ஆண், 38 வயது ஆண், ராக்கிபாளையத்தை சேர்ந்த 9 வயது சிறுமி, 16 வயது ஆண், தாராபுரத்தை சேர்ந்த 36 வயது ஆண், துரைசாமிபுரத்தை சேர்ந்த 80 வயது ஆண், வெள்ளகோவிலை சேர்ந்த நர்சான 25 வயது பெண், வாலிபாளையத்தை சேர்ந்த 70 வயது பெண்.

கொடிக்கம்பத்தை சேர்ந்த 42 வயது பெண், பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த 42 வயது ஆண், ராக்கியாபாளையத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, தாராபுரம் ரோட்டை சேர்ந்த 28 வயது பெண், 10 வயது சிறுவன், முதல் ரெயில்வேகேட் பகுதியை சேர்ந்த 44 வயது ஆண், முருகம்பாளையத்தை சேர்ந்த 42 வயது ஆண், கே.செட்டிபாளையத்தை சேர்ந்த 79 வயது பெண், வள்ளுவர்காலனியை சேர்ந்த 77 வயது ஆண், கே.செட்டிபாளையத்தை சேர்ந்த 46 வயது ஆண்,

காங்கேயம் ரோட்டை சேர்ந்த 65 வயது பெண், ஆண்டிபாளையத்தை சேர்ந்த 27 வயது பெண், பல்லடத்தை சேர்ந்த 69 வயது பெண், பிக்பஜார் தெருவை சேர்ந்த 56 வயது பெண், பல்லடத்தை சேர்ந்த 74 வயது ஆண், பெருமாநல்லூரை சேர்ந்த 43 வயது ஆண், தென்னம்பாளையத்தை சேர்ந்த 54 வயது பெண், திருப்பூரை சேர்ந்த 50 வயது ஆண், 75 வயது பெண், மண்ணரையை சேர்ந்த 25 வயது பெண் ஆகிய 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் தற்போது மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

மேலும் செய்திகள்