செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 446 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது.

Update: 2020-08-03 01:10 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி பெரியார் ராமசாமி தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள், 60 வயது முதியவர், வண்டலூர் மூகாம்பிகை கோவில் தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 24, 29 வயது இளம்பெண்கள் உள்பட 50 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட கொளப்பாக்கம் சின்னம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், 23 வயது இளம்பெண் உள்பட 16 பேர் கொரோனாவால் பாதிப்படைந்தனர்.

மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பேரமனூர் சாமியார் கேட், சாய் பாபா கோவில் தெருவில் வசிக்கும் ஒரே குடும்பதை சேர்ந்த 2 பெண்கள், சட்டமங்களம் கணபதி நகர் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண், 51 வயது ஆண் உள்பட 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 446 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 312 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 12 ஆயிரத்து 238 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 257 ஆக உயர்ந்தது. 2,817 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 23, 27, 23, 36 வயதுடைய ஆண்கள் மற்றும் 30 வயது பெண், 6 வயது சிறுவன் மற்றும் மாடம்பாக்கம் ஊராட்சி பகுதியை சேர்ந்த 62 வயது முதியவர் ஆகியோருக்கு கொரோனா கொரோனா தொற்று உறுதியானது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 393 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 9 ஆயிரத்து 785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 6 ஆயிரத்து 229 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 3,439 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 5 பேர் பலியானதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 117 ஆனது.

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 16 பேர், கடம்பத்தூர் ஒன்றியத்தில் 23 பேர் உள்பட திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 317 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 14 ஆயிரத்து 430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 10 ஆயிரத்து 746 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 3,430 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 8 பேர் இறந்துள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்