புதிதாக 567 பேருக்கு கொரோனா: நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது மேலும் ஒருவர் பலி
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் புதிதாக 567 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அந்த மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது. தூத்துக்குடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் பலியானார்.
நெல்லை,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளிலும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக பலியாகி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த 50 வயதான ஆண் ஒருவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 271 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி, திருச்செந்தூர், சாத்தான்குளம் வட்டாரங்களிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 628 ஆக அதிகரித்து உள்ளது.
மேலும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 424 ஆக உயர்ந்து உள்ளது. 2 ஆயிரத்து 150 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்திலும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பாளையங்கோட்டை மண்டலத்தை சேர்ந்த 21 பேர் உள்பட நெல்லை மாநகர பகுதியில் 87 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
மேலும் அம்பை, சேரன்மாதேவி, களக்காடு, மானூர், நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடியிருப்புகளை சுற்றிலும் சுகாதார துறையினர் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 572 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 175 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 95 பேர் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 315 ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 515 ஆக அதிகரித்துள்ளது.