ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை

ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-29 22:18 GMT
புதுச்சேரி,

ஆதிதிராவிட மாணவர்களின் மேல்நிலை கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் என்று அறிவித்து 4 ஆண்டுகளாகியும் அதை நிறைவேற்றவில்லை. இதனை கண்டித்து தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ பொழிலன் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் செல்வநாதன், அலுவலக செயலாளர் எழில் மாறன், தொகுதி செயலாளர் செழியன் சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதுபற்றி அறிந்ததும் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகும் போராட்டத்தை தொடர்ந்ததால் அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்