திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக சிவமணி நியமனம்
திருப்பத்தூர் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளராக கே.வைரவன்பட்டி சிவமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளராக கே.வைரவன்பட்டி சிவமணி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1990-ம் ஆண்டு கட்சியில் இணைத்துக்கொண்டு கிளைக்கழக செயலாளராக பதவி வகித்தார்.
தற்போது ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் தொடர்ந்து 3 முறை கே.வைரவன்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். தற்போது ஊராட்சிமன்ற தலைவர்களின் கூட்டமைப்பு அவைத்தலைவராக பதவியில் உள்ளார். 2015-ம் ஆண்டு இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தபோது ஊராட்சி சுகாதாரமான ஊராட்சி என தேர்வு செய்யப்பட்டு அகில இந்திய அளவில் ஜனாதிபதியிடம் விருது பெற்றுள்ளார்.
மேலும் இவர் மக்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் எம்.பி. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.