ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தில் மண் பரிசோதனை
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தில் மண் பரிசோதனை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் மையப்பகுதியில் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளம் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த குளத்தின் சுற்றுப்புறசுவர்கள் சேதமடைந்து உள்ளது. இதையடுத்து சுற்றுப்புற சுவர்களை சீரமைத்து குளத்தை புதுப்பிக்க ஆண்டாள் கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்பேரில் 5 உயர்மட்ட குழுக்கள் அனுமதியை பெற்று தற்போது திட்ட மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே புதுப்பிக்கும் முன் குளத்தில் மண் தரம் எவ்வாறு உள்ளது? என்பதை அறிய மண் பரிசோதனை செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து மண் பரிசோதனை நடைபெற்றது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
திட்ட மதிப்பீடு செய்யும் பணிகள் நிறைவடைந்த பின்னர் கோவில் குளத்தை சீரமைத்தல் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கும் என கூறினார். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர்.