சுரண்டை அருகே பரபரப்பு புதுப்பெண் மர்ம சாவு மாமனாரை வெட்டிய சகோதரர்கள் கைது
சுரண்டை அருகே புதுப்பெண் மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக மாமனாரை வெட்டிய அந்த பெண்ணின் சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
சுரண்டை,
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வேலப்பநாடானூரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 70). இவருடைய மகன் அய்யங்கண்ணு (40). இவருக்கு 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், சில மாதங்களிலேயே அவருடைய மனைவி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அய்யங்கண்ணு கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக ஜெயிலில் இருந்து அய்யங்கண்ணு விடுதலையாகி வெளியே வந்தார். தற்போது அவர் பதனீர் வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அய்யங்கண்ணு அதே பகுதியை சேர்ந்த முருகேசனின் மகள் சத்தியாவை (27) 2-வது திருமணம் செய்து கொண்டார். சத்தியா பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார்.
தூக்கில் தொங்கினார்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சத்தியா தூக்கு போட்டு கொண்டதாக அவரது பெற்றோர் வீட்டுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சத்தியாவின் சகோதரர்கள் முத்துக்குமார் (24), பாண்டித்துரை (20) ஆகியோர் பதறியடித்துக் கொண்டு விரைந்து வந்து பார்த்தனர்.
அங்கு தனது அக்காள் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்ததும் அவர்கள் கதறி அழுதனர். பின்னர் அய்யங்கண்ணுவை அவர்கள் தேடி பார்த்தனர். ஆனால், அவர் அங்கு இல்லை. இதையடுத்து அங்கிருந்த மாமனார் கருப்பையாவிடம், மகனை பற்றி கேட்டனர். ஆனால், அவர் சரியாக பதில் சொல்லவில்லை.
மாமனாருக்கு வெட்டு
இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் கருப்பையாவை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்ததும் சேர்ந்தமரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கருப்பையாவை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சத்தியாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து முத்துக்குமார், பாண்டித்துரை ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். சத்தியா மர்ம சாவு தொடர்பாக அய்யங்கண்ணுவை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.