பண்ணை வீட்டில் காவலாளி மனைவி பாலியல் வன்கொடுமை: கைதான 4 பேரில் 2 பேருக்கு கொரோனா தொற்று
பண்ணை வீட்டில் காவலாளி மனைவி பாலியல் வன்கொடுமை: கைதான 4 பேரில் 2 பேருக்கு கொரோனா தொற்று.
மாமல்லபுரம்,
மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலை தெற்குப்பட்டு கிராமத்தில் சென்னையை சேர்ந்த பெண் தொழில் அதிபர் ஒருவரின் பண்ணை வீட்டுக்குள் புகுந்த 3 வாலிபர்கள், காவலாளியை தாக்கி, அவரது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பினர். இது தொடர்பாக செங்குன்றத்தை சேர்ந்த தினேஷ் (வயது 26), பெரம்பூரை சேர்ந்த கார்த்திகேயன் (20), மிதுன் (20) மற்றும் இவர்களுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்து உதவிய செங்குன்றத்தை சேர்ந்த சுதர்சனம் (21) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
பின்னர் 4 பேரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் மிதுன், சுதர்சனம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளான இவர்கள் இருவரும் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டதால் நேற்று மாமல்லபுரம் போலீஸ் நிலையம் முழுவதும் பேரூராட்சி ஊழியர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.