சட்டசபை காவலர்கள் உள்பட 6 பேருக்கு தொற்று முதல்-அமைச்சர், அமைச்சருக்கு பாதிப்பு இல்லை
புதுச்சேரியில் சட்டசபை காவலர்கள் உள்பட 6 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. முதல்-அமைச்சர், அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து சட்டசபை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. திறந்த வெளியில் மரத்தின் அடியில் சட்டசபை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அரசு சார்பில் கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, பாஸ்கர், சந்திரபிரியங்கா, பா.ஜ.க. தலைவர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் அதிகாரிகள், சட்டசபை காவலர்கள், ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
இதற்கான முடிவுகள் நேற்று காலை கிடைத்தன. இதில் முதல்-அமைச்சர், சபாநாயகர், அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
6 பேருக்கு தொற்று
ஆனால் சட்டசபை காவலர்கள் 2 பேர், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் உதவியாளர் ஒருவர் உள்பட 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்தகட்டமாக இன்று (புதன்கிழமை) மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி சட்டசபை செயலாளர் முனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சட்டசபை காவலர்கள் 2 பேருக்கும் எம்.எல்.ஏ. ஒருவரின் உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டசபை வளாகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமை) வரை சட்டசபை வளாகத்தை மூடி வைக்க சட்டப்பேரவை தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சட்டசபை மற்றும் வளாகத்தில் இயங்கும் மற்ற அலுவலகங்கள் அனைத்தும் வருகிற 31-ந் தேதி வரை மூடி வைக்கப்பட்டிருக்கும். வழக்கமான அலுவல் பணிகள் வருகிற 3-ந் தேதி முதல் செயல்படும்’ என தெரிவித்துள்ளார்.