என்.ஆர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் மரணம்; அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
கொரோனா தொற்றால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பாலன் மரணம் அடைந்ததையொட்டி அரசியல் கட்சி தலை வர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பாலன் (வயது 68). கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல், சளியால் அவதிப்பட்டார். இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலன் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 3.25 மணியளவில் சிகிச்சை பலனின்றி பாலன் மரணமடைந்தார்.
ஏற்கனவே சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவர் அவதிப்பட்டு வந்தார். பாலன் மரணமடைந்த தகவல் அறிந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு கூடினர். அதிகாலையில் பாலனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் அங்கு சென்று அவரது உடலை பார்த்தனர்.
சாதாரண மில்தொழிலாளி
ரோடியர் மில்லில் சாதாரண தொழிலாளியாக பணியாற்றிய பாலன் காங்கிரசில் சேர்ந்து கட்சிப் பணியாற்றினார். மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர், பொதுச்செயலாளர் ஆகிய பதவிகளை வகித்தார். முன்னாள் அமைச்சர் கண்ணன் தொடங்கிய த.மா.க.வில் பொதுச்செயலாளராக இருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கிய போது, அதில் சேர்ந்து பாலன் பொதுச்செயலாளராக இருந்து வந்தார். கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் நியமன எம்.எல்.ஏ.வாகவும், ரோடியர் மில் சேர்மனாகவும் பாலன் பதவி வகித் தார். பாலனின் இறுதிச் சடங்கு நேற்று மாலை கருவடிக்குப்பம் சுடுகாட்டில் நடந்தது. பாலனுக்கு பார்த்திபன் என்ற மகனும், உதயபானு என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது.
முதல்-அமைச்சர் இரங்கல்
பாலன் மறைவுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எதிர்க் கட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிவா, வெங்கடேசன், அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர், பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் சஞ்சீவி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.