குடியாத்தம் சட்டமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முன்னேற்பாடாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.;
வேலூர்,
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. அதற்கான முன்னேற்பாடாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல்நிலை சரிபார்க்கும் பணிகளை மேற்கொள்ளும்படி மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க.வை சேர்ந்த காத்தவராயன் கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதனால் காலியாக உள்ள குடியாத்தம் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல்நிலை சரிபார்க்கும் பணி கடந்த 20-ந் தேதி வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பணிக்காக பெங்களூருவில் இருந்து வந்த பெல் நிறுவன என்ஜினீயர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து அந்த பணிகள் ஒத்தி வைக்கப்பட்டன.
கலெக்டர் தொடங்கி வைத்தார்
இந்த நிலையில் நேற்று காலை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை அரசியல்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து பெல் நிறுவன என்ஜினீயர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் இணைந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை மேற்கொண்டனர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், வேலூர் தாசில்தார் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் கூறுகையில், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முன்னேற்பாடாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் 20 நாட்கள் நடைபெறும். குடியாத்தம் தொகுதியில் 290 வாக்குச்சாவடி மையங்களில் 831 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வேலூரை பொருத்தவரை ஊரடங்கு கட்டுப்பாட்டை அதிகப்படுத்தும் நிலை இல்லை. மாவட்டம் முழுவதும் இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பல்வேறு பகுதிகளில் மளிகை உள்ளிட்ட பல்வேறு கடைகளை குறைந்த நேரமே திறக்க வியாபாரிகள் தாமாகவே விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.