வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 204 பேருக்கு தொற்று
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது. மேலும் நேற்று ஒரே நாளில் வேலூர் மாநகராட்சி உதவி கமிஷனர், டாக்டர்கள் உள்பட 204 பேருக்கு தொற்று உறுதியானது.
வேலூர்,
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பெண் டாக்டர், நர்சுகள், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டது. அவர்களுக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டது. நேற்று வந்த பரிசோதனை முடிவில் பெண் டாக்டர், நர்சு, ஊழியர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனியார், அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் குடும்பத்தினர், உடன் பணிபுரிந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பணிபுரியும் 2 டாக்டர்கள், 3 நர்சுகள், கேண்டீனில் பணிபுரியும் ஊழியர் உள்பட 10 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் நெருங்கி பழகிய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சி.எம்.சி. மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் 15 பேருக்கு நேற்று தொற்று உறுதியாகி உள்ளது.
மாநகராட்சி உதவி கமிஷனர்
வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன். இவருக்கு கடந்த சில நாட்களாக சளி, இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து அவருக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டது. இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். இந்த நிலையில் மருத்துவப் பரிசோதனை முடிவில் உதவி கமிஷனருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
அதைத்தொடர்ந்து அவர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருடன் பணிபுரிந்த சுகாதார அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்பட மாநகராட்சி ஊழியர்களுக்கு சேகரிக்கப்பட்ட சளிமாதிரி பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என முடிவுகள் வந்தன.
அதைத்தவிர மண்டித்தெரு, லாங்குபஜார் வியாபாரிகள், வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள வங்கி காவலாளி, சத்துவாச்சாரி கோர்ட்டு ஊழியர், கன்டோன்மென்ட் ரெயில் நிலைய ஊழியரின் குடும்பத்தினர், காவலர் குடியிருப்பு வசிக்கும் போலீஸ்காரர்களின் குடும்பத்தினர், வங்கி ஊழியர்கள், காகிதப்பட்டறையில் ஒரு வயது ஆண் குழந்தை, காந்திரோட்டில் 3 வயது ஆண் குழந்தை, சத்துவாச்சாரியில் 85 வயது மூதாட்டி, அண்ணாநகரில் 88 முதியவர், மாநகராட்சி பகுதியில் 121 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 204 பேருக்கு ஒரேநாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 5,107 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். 3 ஆயிரத்து 836 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,171 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.