முழு ஊரடங்கால் வாலாஜா நகரம் வெறிச்சோடியது

முழு ஊரடங்கால் வாலாஜா நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2020-07-26 22:30 GMT
வாலாஜா, 

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஜூலை மாதம் முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

இந்த மாதம் வரும் 4 ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று முழு ஊரடங்கை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா நகரில் உள்ள பஸ் நிலையம், மார்க்கெட், பஜார் சாலை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.

மேலும் செய்திகள்